Advertisment

புதிய மாவட்டங்களுக்கு அலுவலகம்... முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்...

Chief Minister Palanisamy laid the foundation program to build an office for the new districts...

Advertisment

தமிழகத்தில் கடந்த ஆண்டில், புதிதாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஆரணி, செங்கல்பட்டு, தென்காசி, சமீபத்தில் மயிலாடுதுறை என ஐந்துக்கும் மேற்பட்ட புதிய மாவட்டங்களைதமிழக அரசு அறிவித்தது.

பிரிக்கப்பட்ட புது மாவட்டங்களில், நான்கு மாவட்டங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் கட்டும் பணிகளுக்காக,சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதன்படி கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட வீரசோழபுரம் என்ற இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் ரூ.104 கோடி செலவில் ஆட்சியர் அலுவலக வளாகம் உருவாக்கப்படுகின்றது. அதற்கு இன்று சென்னையில் இருந்தபடி முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதேவேளையில், வீரசோழபுரம் கிராமத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஜியாவுல் ஹக், ராமநாதன் உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்துகொண்டனர். விரைவில் கட்டுமானப் பணி துவக்கப்பட்டவுள்ளது. கள்ளக்குறிச்சி தனிமாவட்டம் அந்தஸ்து பெற்றதும் அதற்கான கட்டிடப் பணிகள் நடைபெற இருப்பதைக் கண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Edappadi Palanisamy kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe