Skip to main content

புதிய மாவட்டங்களுக்கு அலுவலகம்... முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்...

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

Chief Minister Palanisamy laid the foundation program to build an office for the new districts...

 

தமிழகத்தில் கடந்த ஆண்டில், புதிதாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஆரணி, செங்கல்பட்டு, தென்காசி, சமீபத்தில் மயிலாடுதுறை என ஐந்துக்கும் மேற்பட்ட புதிய மாவட்டங்களை தமிழக அரசு அறிவித்தது. 


பிரிக்கப்பட்ட புது மாவட்டங்களில், நான்கு மாவட்டங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் கட்டும் பணிகளுக்காக, சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 


அதன்படி கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட வீரசோழபுரம் என்ற இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் ரூ.104 கோடி செலவில் ஆட்சியர் அலுவலக வளாகம் உருவாக்கப்படுகின்றது. அதற்கு இன்று சென்னையில் இருந்தபடி முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதேவேளையில், வீரசோழபுரம் கிராமத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஜியாவுல் ஹக், ராமநாதன் உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்துகொண்டனர். விரைவில் கட்டுமானப் பணி துவக்கப்பட்டவுள்ளது. கள்ளக்குறிச்சி தனிமாவட்டம் அந்தஸ்து பெற்றதும் அதற்கான கட்டிடப் பணிகள் நடைபெற இருப்பதைக் கண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனி அந்த வேட்டியைக் கூட கட்ட முடியாது'- கடம்பூர் ராஜூ பேச்சு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'We can't even build that dhoti anymore' - Kadambur Raju's speech

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக பெயர், கொடி, சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஓபிஎஸ்க்கு நிரந்தர தடை விதித்துள்ளது நீதிமன்றம். இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், 'இதற்கு முன்பாவது இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

துரோகம் பண்ணியவர்கள் இனி அந்த வேட்டியைக்கூட கட்ட முடியாது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இரண்டு கோடிக்கு மேற்பட்ட தொண்டர்களை அதிமுக சேர்த்துள்ளது.  நாள் முழுவதும் சோதனை தான். ஒன்று நீதிமன்றம் அல்லது தேர்தல் கமிஷன். இப்படி இத்தனை குழப்பங்களையும் சந்தித்து சவால்களை சந்தித்து அத்தனையும் சாதனைகளாக மாற்றியுள்ளோம். இன்று அதிமுகவை பழைய ஒழுங்கோடு இன்னும் சொல்லப்போனால் முன்பு இருந்ததை விட  நல்ல முறைக்கு கொண்டுவந்துள்ளார் எடப்பாடி. இன்றைக்கும் இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதா? இல்லை சேருமா? இதுதான் இன்றைக்கு பட்டிமன்றம், விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று தெளிவாக கட்சியின் பொதுச் செயலாளர் சொல்லிவிட்டார். இந்த கருத்து ஒவ்வொரு அதிமுக தொண்டர்களுடைய கருத்து தான்'' என்றார்.

Next Story

எடப்பாடி பழனிசாமியின் மனித சங்கிலி போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

தமிழ்நாட்டில் போதை பொருட்களை தடுக்க வலியுறுத்தி, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலையில், எடப்பாடி பழனிசாமி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டார்.