திருச்சி மணப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் பல்வேறுகட்ட மீட்பு முயற்சிகள் தோல்வியில் முடிந்துசுஜித்தின்உடல் 5 நாள் கழித்து சடலமாக மீட்கப்பட்டது.நேற்று சுஜித்தின்நினைவிடத்திற்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின். செய்தியாளர் சந்திப்பில்,

Advertisment

The Chief Minister must respond with conscience without being angry - Stalin

80 மணி நேரம் எடுத்துக்கொண்டாலும் மீட்புப்பணியை பொறுத்தவரை இந்தஅரசு இதில் எடுத்திருக்கக்கூடியமெத்தன போக்கும் ஒரு காரணம். குறிப்பாக அங்கு இருப்பது மென்பாறையா கடின பாறையா என தெரிந்து வைத்திருக்க வேண்டிய துறை தமிழக வடிகால் வாரியத்துறை. 36 அடி பள்ளத்தில்இருக்கும்போதேகுழந்தையை மீட்டிருக்கலாம்.அமைச்சர்களோ சில அதிகாரிகளோ தொலைக்காட்சிக்கு பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப்பணியில் காட்டவில்லையோ என்ற ஏக்கம் இருக்கிறது என்றார்.

The Chief Minister must respond with conscience without being angry - Stalin

Advertisment

அதனையடுத்து நேற்று மாலை சுஜித்தின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்டாலின் போகின்ற போக்கில் மெத்தனம் என சொல்லிவிட்டு போகிறார். 2009 ஆண்டு இதேபோன்ற சம்பவத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோதுஏன் இராணுவத்தையும், ஹெலிகாப்டரையும் பயன்படுத்தவில்லை என அவர் சொல்லவரா என கேள்வி எழுப்பினார்.

The Chief Minister must respond with conscience without being angry - Stalin

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், சுஜித் விவகாரத்தில் யார் மீதும் சினம் கொள்ளாமல் மனசாட்சியுடன் முதல்வர் பதில் சொல்ல வேண்டும். மக்கள், நடுநிலையாளர்கள் மனங்களில் உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை ஹெலிகாப்டரில் அழைத்து வராதது ஏன்?. 5 மணிநேரத்தில் வரவேண்டிய மீட்புப்படை சம்பவ இடத்திற்கு வர 12 மணி நேரம் எடுத்துக்கொண்டது ஏன்?.ஆழ்துளை கிணறு மீட்பு பணியை செய்யாத தேசிய பேரிடர் மீட்பு படையை அழைத்ததற்கு அரசின் விளக்கம் என்ன?. அனைத்தும் பொய் என்று ஒரே போடாக போட்டுவிட்டு கடந்து போக முயற்சி செய்யக்கூடாது எனக்கூறியுள்ளார்.