Skip to main content

பேரறிஞர் அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

Chief Minister M.K.Stal's respect to the statue of Guru Anna

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் காலை 10 மணியளவில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

 

இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்றுள்ளார். இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனையொட்டி காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

அப்போது அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, காஞ்சிபுரம் மேயர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், காஞ்சிபுரம் துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாளை கலைஞர் நினைவிடம் திறப்பு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
kalaignar memorial opening tomorrow

கலைஞரின் நினைவிடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

சென்னைக் கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95 வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி, தோழமைக் கட்சி என அனைத்துக்கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், திமுக தொண்டர்களும் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Boy incident by electrocution Chief Minister MK Stalin obituary

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெலாகுப்பம் ரோடு பாரதிதாசன் பேட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் தேவேந்திரன் என்பவர், அப்பகுதியில் உள்ள அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது சிறுவன் தேவேந்திரன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அச்சமயம் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே சமயம் போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.

மேலும் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் உயிரிழந்த சிறுவன் தேவேந்திரன் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.