Advertisment

மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

Chief Minister M.K.Stal's letter to the Union Minister

Advertisment

ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த 21 மீனவர்களில் 13 பேர் புதுக்கோட்டையைச்சேர்ந்தவர்கள் என்றும், 8 பேர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும்யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை செய்து வருவதாகத்தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் நேற்று (06.12.2023) கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு. அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடித் தொழிலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப்பாதித்துள்ளது.

Advertisment

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதோடு, இலங்கைக் கடற்படையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

fisherman Jaishankar letter
இதையும் படியுங்கள்
Subscribe