Skip to main content

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

 

Chief Minister M.K.Stal's letter to Union External Affairs Minister

 

ஓமன் நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் பெத்தாலி என்பவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இவரை மீட்டுக் கொண்டுவர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (21.11.2023) கடிதம் எழுதியுள்ளார்.

 

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகத்தில் உள்ள NOOH 1012 மற்றும் YAYA 1184 அல்ரெடா (ஓமானியன்) ஆகிய மீன்பிடிப் படகுகளில் வேலை செய்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவில் பெத்தாலி என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த 18 மீனவர்களின் சம்பளத்தை உரிமையாளர் தராததால் உரிமையாளருக்கும் மீனவர்களுக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்துள்ளது.

 

இந்நிலையில் பெத்தாலியை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளனர். எனவே ஓமன் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் பெத்தாலியை மீட்டுத் தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை கேட்டுக்கொண்டுள்ளார். பெத்தாலியை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளதாகவும் அவரை உடனடியாகக் கண்டுபிடித்து இந்தியாவுக்குத் திருப்பி கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெத்தாலி மனைவி ஷோபா ராணி கோரிக்கை விடுத்துள்ளதையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !