/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mksa33232.jpg)
சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர் அகமதாபாத் செல்லும் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (29/07/2022) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு சதுரங்கப் பலகையை வழங்கி வழியனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் முனைவர் எல்.முருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)