முன் விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறைவாசிகள் அவர்கள் வாழ்வில் மேம்பட சுயதொழில் துவங்கி வாழ்வாதாரம் பெறுவதற்காக ரூ. 3 கோடியே 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பள்ளிகள் துறையின் சார்பில் நடந்த நிகழ்வில் தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் சார்பில் உதவி தொகை வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு நேரடியாக உதவித்தொகை காசோலையை வழங்கினார்.
இதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.