சென்னை கொளத்தூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவத் தொகுப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (10/06/2021) வழங்கினார்.நீராவிப் பிடிக்கும் இயந்திரம், கபசுரக்குடிநீர் பொடி, விட்டமின் மாத்திரைப் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன. தூய்மைப் பணியாளர்கள்,தன்னார்வலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என 2,000 பேருக்கு வழங்கப்பட்டது. அதேபோல், ஐந்து தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 160 ஆசிரியர்களுக்கு ரூபாய் 2,500 உதவித்தொகை, நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வின் போது, தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/k2_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/k1_2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/k6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/k7.jpg)