Tamil Nadu Chief Minister M.K.Stalin confirmed corona infection!

Advertisment

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக அதிகரித்து பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருக்கிறது. பல மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ''இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்' எனத் தெரிவித்துள்ளார்.