Chief Minister M.K.Stalin condolence on Velammal grandmother

தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும்கொரோனாகால பேரிடர் நிவாரணத்தொகையைப்பெற்ற மகிழ்ச்சியைபுகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வேலம்மாள் பாட்டி. இவர் கடந்த ஒரு சில தினங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து நேற்று இரவு உயிரிழந்தார். வேலம்மாள் பாட்டி உயிரிழந்த சம்பவம் மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

இந்நிலையில், வேலம்மாள் பாட்டி மறைவுக்குத்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனாபேரிடர் கால நிவாரணமாகத்திமுக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்றபோது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக, அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலம்மாள் பாட்டி புகைப்படத்தைத்தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு, “இந்த ஏழைத்தாயின் சிரிப்பே... நம் ஆட்சியின் சிறப்பு” எனக் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.