Advertisment

'நிலவில் இந்தியா' - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

Chief Minister M.K.Stal praises 'India in the moon'

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றது. தொடர்ந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளது சந்திரயான் - 3.

Advertisment

சந்திரயான் - 3 தரையிறங்கும் காட்சிகளை நேரலையில் பார்ப்பதற்காக இன்று மாலை 5.20 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சியில் நேரலையை துவங்கியுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு லேண்டர் வந்தவுடன் தானியங்கி மூலம் நிலவில் தரையிறக்குவதற்கான கட்டளையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்க தயாராகி வந்தனர். தற்போது அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்ட நிலையில் தரையிறங்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பலகட்ட நடவடிக்கைகளுக்கு பின் வெற்றிகரமாக நிலவின்தென் துருவத்தில் இறங்கி நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு இந்தியா என சாதித்தது சந்திரயான் - 3

Advertisment

Chief Minister M.K.Stal praises 'India in the moon'

நாடுமுழுவதும் இந்தச் சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'நிலவில் இந்தியா! இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். சந்திராயன் - 3 வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரனின் மேற்பரப்பைக் கைப்பற்றிய நான்காவது நாடாக இந்தியாவை நிறுத்துவதற்கான மகத்தான சாதனை. அயராத முயற்சியை கொடுத்த ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு இது ஒரு மாபெரும் பாய்ச்சல்' என தெரிவித்துள்ளார்.

Space
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe