Tribute to admk chief Madhusudhanan's Chief Minister M. Kastalin!

சென்னை தண்டையார் பேட்டையில் வைக்கப்பட்டிருந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்குத் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகதலைவருமான மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

அஞ்சலி செலுத்திய பின், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மதுசூதனின் உறவினர்களிடம் முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.

Advertisment

முன்னதாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுகசார்பில் மதுசூதனன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மதுசூதனனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.

அஞ்சலிக்குப் பிறகு மதுசூதனின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.