Advertisment

சேலம், தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்!

Chief Minister MK Stalin's tour in Salem, Dharmapuri!

வரும் செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த மாவட்டங்களில், வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, கரோனா தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்கிறார்.

Advertisment

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது, கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் உள்ளிட்டவைக் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் கூறுகின்றன.

Advertisment

முதலமைச்சர் சுற்றுப்பயணத்தின் போது, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அவருடன் உடனிருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

dharmapuri Salem chief minister Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe