Advertisment

மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

Chief Minister M.K. Stalin's letter

Advertisment

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14-01-2024) கடிதம் எழுதியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும், தலைவர்களும் இலங்கை கடற்படையினருக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீனவர்கள் கைது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,“புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், நேற்று (13.01.2024) நெடுந்தீவு அருகே மூன்று விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தை இலங்கை அரசுடன் உரிய தூதரக வழிமுறைகள் மூலம் எடுத்துச் சென்று, இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Boat fisherman Jaishankar letter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe