தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக நடைமுறையில் இருந்து தளர்வுகளற்ற ஊரடங்குவிலக்கிக்கொள்ளப்பட்டு பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி மளிகை, காய்கறி, பேக்கரி உள்ளிட்ட கடைகள் மாலை 5 மணி வரை இயங்கி வருகின்றது. பொதுபோக்குவரத்துக்கு மாநிலம் முழுவதும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நாளை காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்வார்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் ஆலோசனை!
Advertisment