Advertisment

மு.மீனாட்சி சுந்தரம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Chief Minister MK Stalin's condolences on the death of Meenakshi Sundaram!

முன்னாள் பெங்களூரு தமிழ் சங்கத் தலைவர் மு.மீனாட்சி சுந்தரம் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக அரசு இன்று (09/03/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முன்னாள் பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவரும், தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவருமான மு.மீனாட்சி சுந்தரம் மறைவு வேதனையளிக்கிறது. அல்சூர் ஏரிக்கரையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முத்தமிழறிஞர் கலைஞர், கடந்த 2009- ஆம் ஆண்டு திறந்து வைத்த போது பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்தவர் அவர்.

Advertisment

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

condolence Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe