Chief Minister MK Stalin's birthday should be celebrated with welfare assistance!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதியன்று, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் கடந்த 50 ஆண்டுகளாக திமுகவில் உழைப்பு, தியாகம், நிர்வாகத்திறமை செலுத்தியும், தமிழக மக்களின் உள்ளம் கவர்ந்த தலைவராகவும் விளங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாள் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Advertisment

சேலம் மத்திய மாவட்டத்தில், மாநகராட்சி கோட்டங்களில் தெருக்கள் தோறும், பேரூர் மற்றும் ஊராட்சிகளில் உள்ள கிளைக் கழகங்களிலும் கட்சி கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கியும் ஏழை, எளியோர், மாணவ மாணவிகள் என அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும். உலகமே பாராட்டும் வகையில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வரின் பிறந்தநாளை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகள், கழக தோழர்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.