தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11/11/2021) கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக, சென்னை, சிந்தாரிப்பேட்டையில் உள்ள கொதிகலன் மூலம் உணவு தயாரிக்கும் பொது சமையற் கூடத்தில் தயாரிக்கப்பட்டுள்ள உணவினை ருசித்துப் பார்த்து தரத்தினை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர்/ பெருநகர சென்னை மாநகராட்சி (வடக்கு) பொறுப்பு அலுவலர் முனைவர் தா.கார்த்திகேயன் இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-11/foodmkee33.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-11/foodmka_1.jpg)