Chief Minister MK Stalin who started the excavation work!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11/02/2022) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் 2021- 2022 ஆம் ஆண்டு ஏழு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட உள்ள அகழாய்வுபணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளைக் காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைச் செயலாளர், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை முதன்மைச் செயலாளர், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி, சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர், அரியலூர் மாவட்டத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisment