



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20/11/2021) கனமழையால் கொசஸ்தலையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கரையோர பகுதியான மணலி புதுநகர், வடிவுடையம்மன் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக அகற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், ஜி.ஆர்.டி. விவேகானந்தர் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை பார்வையிட்டு, ஆய்வு செய்து, அங்கு தங்கியுள்ள மக்களிடம் அவர்களது தேவைகளைக் கேட்டறிந்தார். அத்துடன் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., வணிக வரி ஆணையர்/ முதன்மைச் செயலாளர் எம்.ஏ.சித்திக் இ.ஆ.ப., உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர்/ பெருநகர சென்னை மாநகராட்சி (வடக்கு) பொறுப்பு அலுவலர் முனைவர் தா.கார்த்திகேயன் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.