Advertisment

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஓசூர் வருகை!

Chief Minister MK Stalin to visit Hosur tomorrow

தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நாளை (05/08/2021) காலை 10.00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு வருகிறார். சூளகிரியில் நடைபெற உள்ள ‘இல்லம் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை துவக்கிவைக்கிறார். இவ்விழாவில் அவர், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

Advertisment

இந்நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஓசூர் செல்லும் அவர், அங்கு தனியார் நிதி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள ஒரு லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடும் திட்டத்தைத் துவக்கிவைக்கிறார்.

Advertisment

இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனி விமானத்தில் சென்னைக்குக் கிளம்பிச் செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி ஓசூரில் காவல்துறை பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

chief minister Hosur Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe