ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்றுவரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவிவருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள், ஆப்ரேஷன் கங்கா மூலம் தொடர்ச்சியாக இந்தியா அழைத்துவரப்படுகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைனில் இருந்து கிளம்பிய கடைசி பேட்ஜ் தமிழக மாணவர்கள் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கருடன் தொலைபேசியில் பேசிய மு.க. ஸ்டாலின், தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.