விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், முதலியார்குப்பதில் நேற்று (27/10/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில், 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தைத் தொடங்கிவைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாணவர்கள் கல்வி கற்பதைப் பார்வையிட்டார். அதேபோல், மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி முதலமைச்சர் அவர்களுடன் உரையாடினார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் ஐ. லியோனி, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறை ஆணையர் க. நந்தகுமார் இ.ஆ.ப., விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த. மோகன் இ.ஆ.ப., அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.