


Published on 12/11/2021 | Edited on 12/11/2021
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12/11/2021) கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்யும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம், கீழ்கோட்டையூரில் உள்ள தேநீர் கடைக்குச் சென்று மழை பாதிப்பு குறித்த விவரங்களைக் கேட்டறிந்தவர், தேநீர் அருந்தினார். மேலும், அங்கிருந்த சிறுவனிடம் முதலமைச்சர் உரையாடினார்.
இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.