ADVERTISEMENT

தஞ்சையில் முதல்வர்; தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு!

11:12 AM Jun 09, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

காவிரி டெல்டா பகுதிகளில் நீர்வழித் தடங்களையும் தூர்வாரும் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இந்த தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். மேலும் மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரைக்கும் செல்லும் வகையில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். தஞ்சை, திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தூர்வாரும் பணியினைப் பார்வையிடும் முதல்வர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகளையும் வழங்கவுள்ளார். முதற்கட்டமாக தஞ்சை ஆலங்குடி பகுதிகளில் நீர்வழித் தடங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் அங்கு நடக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ், கே.என். நேரு உள்ளிட்டோரும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT