
சென்னை மாவட்டம், வேளச்சேரி, விஜயநகரம் சந்திப்பில் 1.028 கி.மீ. நீளத்தில், ரூபாய் 67 கோடியில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தில் ஓரடுக்கை மட்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (01/11/2021) திறந்துவைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இந்த மேம்பாலமானது தரமணியில் இருந்து 100 அடி சாலையை இணைக்கிறது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர், தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலை) பெருநகரம் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வேளச்சேரி மேம்பாலம் திறப்பின் மூலம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.