Advertisment

அரசுக் கலைக் கல்லூரிகளுக்கான கட்டடங்கள், ஆய்வகங்களைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

Advertisment

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (28/10/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறையின் சார்பில் அரசு கலைக் கல்லூரிகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அறிவியல் மையம் ஆகியவற்றில் 102 கோடியே 94 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், பல்நோக்கு கூடம், கூட்டரங்கம், புத்தாக்க மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களைக் காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன் இ.ஆ.ப., தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் க. லட்சுமி பிரியா இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

chief minister tn govt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe