
மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (27/11/2021) காலை 11.00 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப., அரசு உயரதிகாரிகள் ஆகியோர் முதலமைச்சருடன் ஆளுநர் மாளிகைக்குச் செல்ல உள்ளதாக தகவல் கூறுகின்றன.
இச்சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் கனமழையால் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள், அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ள நிவாரண நிதி உள்ளிட்டவை குறித்து ஆளுநருடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.