தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவரும் ஏழாவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமையொட்டி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள ராஜ்கோ மஹாலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமைப் பார்வையிட்டு, பதிவேடுகளை ஆய்வு செய்தார். அத்துடன், பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/mk8999.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/mks33332222.jpg)