Chief Minister MK Stalin inspects corona vaccination camp

தமிழ்நாடு முழுவதும் இன்று (19/09/2021) காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்.

Advertisment

Chief Minister MK Stalin inspects corona vaccination camp

Advertisment

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னையில் தாடண்டர் நகர், ஈக்காட்டுதாங்கல் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்துக் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) விஷு மகாஜன் உடனிருந்தார்.