/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/92_16.jpg)
டெல்டா பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டுவருகிறார். நாகை மாவட்டம் கருவேலங்கடையில் உள்ள கல்லாறு வாய்க்கால் பகுதியில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை இன்று காலை ஆய்வு செய்த நிலையில், அடுத்ததாக மயிலாடுதுறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.
மயிலாடுதுறை அனந்தமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடி நடைபெற்றுவருகிறது. நேரடி நெல் விதைப்பு முறை மூலம் நடைபெறும் விவசாயப் பணிகளை நேரில் பார்வையிட்ட முதல்வர், அந்தப் பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)