டி.ராஜேந்தரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

Chief Minister MK Stalin inquired about T. Rajendran's health!

நடிகரும், திரைப்பட இயக்குநருமான டி.ராஜேந்திர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மே 19- ஆம் தேதி அன்று சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.தொடர்ந்து 10 நாட்களாக மருத்துவமனையில் டி.ராஜேந்தர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (29/05/2022) காலைராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று டி.ராஜேந்தரை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வின் போது, அமைச்சர் கே.என்.நேரு, அரசு உயரதிகாரிகள் மற்றும் டி.ராஜேந்தர் குடும்பத்தினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Chennai
இதையும் படியுங்கள்
Subscribe