சென்னை, காமராசர் சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம் அருகில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் இன்று காலை 09.30 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ‘அனைத்தும் சத்தியம்’ என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தர். மேலும், மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.