Chief Minister MK Stalin having tea at a roadside shop!

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28/11/2021) திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆவடி மாநகராட்சி, மூர்த்தி நகர் பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.

இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கே.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப., மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் இரா.ஆனந்தகுமார் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப., உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.