Chief Minister MK Stalin has released the song

Advertisment

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (26/07/2021) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இயற்றி இசையமைத்த "வென்று வா வீரர்களே" என்ற பாடலை வெளியிட்டார்.

இந்த நிகழ்வின் போது, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் ரமேஷ் சந்த் மீனா இ.ஆ.ப., தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஆதவ் அர்ஜுன் இ.ஆ.ப. ஆகியோர் உடனிருந்தனர்.