Skip to main content

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்"- அமைச்சர் சக்கரபாணி பேச்சு!

Published on 24/10/2021 | Edited on 24/10/2021

 

"Chief Minister MK Stalin is fulfilling his election promises" - Minister Chakrabarty speech!

 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள தொப்பம்பட்டியில் மாநில விரிவாக்கத் திட்டத்திற்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் உழவர் விழா நடைபெற்றது. இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு  நலத் திட்ட உதவிகளான உரம் மற்றும் தென்னை கன்றுகளை வழங்கினார்.

 

விழாவில் பேசிய உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, "தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். விவசாயிகளுக்காக வேளாண்மைத்துறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் விவசாயிகள் நலன் கருதி பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி, உழவர் விழா நடத்தப்படுகிறது. தொப்பம்பட்டி வட்டாரத்தில் 2021-2022 ஆம் ஆண்டு 'அட்மா' திட்டத்தின் கீழ் வறட்சியான பகுதியில் நீர் ஆதாரத்தைப் பெருக்கி விவசாய பரப்பு அதிகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

 

மழை காலங்களில் உபரிநீர் வீணாகி கடலில் கலப்பதைத் தடுத்து சேமிக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக 1,650 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் நலனுக்காக முருங்கை அதிக அளவில் சாகுபடி நடைபெறும். ஏழு மாவட்டங்களை ஒருங்கிணைந்து ஏற்றுமதி மண்டலமாக அறிவித்துள்ளார். மேலும் நெல்லுக்கு ஆதார விலை கரும்புக்கு ஊக்கத் தொகை ஆகியவற்றையும் அறிவித்துள்ளார்." இவ்வாறு அமைச்சர் கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பாஜகவின் அதிகார வெறி இதன் மூலம் தெரிகிறது''-செல்வப்பெருந்தகை பேட்டி

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
"BJP's hunger for power is evident through this" - Selvaperunthakai interview

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் கடந்த 17.06.2024 அன்று காலை 9 மணியளவில் நின்று கொண்டிருந்த சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ரயில் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''உபகரணங்கள் வாங்குவதற்கு பதிலாக, பாதுகாப்பிற்கு செலவு செய்வதற்கு பதிலாக, ஆடம்பர வீடுகள் கட்டுவதும், சுற்றுலா மாளிகை கட்டுவதும், அந்தச் சுற்றுலா மாளிகை பங்களா வீடுகளுக்கு விலை உயர்ந்த பர்னிச்சர்களை வாங்குவதிலும் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள இடத்தில் இவர்கள் கவனம் செலுத்தவில்லை என்று தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு சிஏஜி அறிக்கை சொல்கிறது. ஆனால் மெத்தனபோக்கோடு இப்படி விபத்துகளை தொடர்ந்து பாஜக அரசு அனுமதித்து இருக்கிறது.

காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகவும், ரயில்வேதுறை அமைச்சராகவும் இருந்த ஓ.வி.அழகேசன் அரியலூர் விபத்து ஏற்பட்டவுடன் பதவியை ராஜினாமா செய்தார். சாஸ்திரியும் ராஜினாமா செய்திருக்கிறார். மம்தா பானர்ஜியும் ரயில்வேதுறை அமைச்சராக இருந்த பொழுது விபத்து நடத்தவுடன் ராஜினாமா செய்தார். நிதிஷ்குமார் ரயில்வே துறை அமைச்சராக இருந்த பொழுது ராஜினாமா செய்தார். ஏன் பாஜக அமைச்சர்கள் மட்டும் ராஜினாமா செய்ய மறுக்கிறார்கள். பிடிவாதமாக இருக்கிறார்கள். அதிகார வெறி என்பது இதன் மூலமாக தெரிகிறது. ஆகவே இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட விபத்துக்களை தவிர்க்க வேண்டும். சிஏஜி அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் லட்சக்கணக்கான கோடி நிதியை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்''என்றார்.

Next Story

10 மணி வரை மழை; நான்கு மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Rain till 10 p.m.; Alert for four districts

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் இரவு 10 மணி வரை சேலம், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.