Advertisment

ஊரடங்கு நீட்டிப்பா? - முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை!

CHIEF MINISTER MKSTALIN CORONAVIRUS PREVENTION DISCUSSION

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் மே 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை (22/05/2021) காலை 10.00 மணிக்கு மருத்துவ நிபுணர்களுடன்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து, அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் குழுவுடனும் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

Advertisment

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளிக்கலாமா? என்று குறித்து முதல்வர் ஆலோசிக்க உள்ளார்.

Advertisment

பின்னர், மருத்துவ நிபுணர் குழு மற்றும் அனைத்து கட்சி சட்டமன்றக் குழு பரிந்துரைக்கும் கருத்துகள் அடிப்படையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மே மாதம் இறுதி வாரத்தில் கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ள நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

prevention coronavirus discussion chief minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe