ஊரடங்கு நீட்டிப்பா?- முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

coronavirus prevention lockdown chief minister mkstalin discussion

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் ஜூன் 7ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா அல்லது முழு ஊரடங்கில் தளர்வுகளை அளிக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்திவருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா அதிகரித்துவரும் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில்மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அப்படியே தொடரலாமா? என்பது குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்திவருகிறார்.

chief minister coronavirus discussion lockdown
இதையும் படியுங்கள்
Subscribe