மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (29/10/2021) பாலப்பணிகள் மற்றும் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காகச் செல்லும் வழியில், மாணவி ஒருவருவர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதேபோல், சாலையில் கூடியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் உரையாடினார்.
திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஷோபனாவிற்கு மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பயில ஏற்பாடு செய்து, பட்டப்படிப்பிற்கான புத்தகங்கள், புத்தகப்பை, கல்வி உபகரணங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.