Chief Minister mk stalin cried after tying the of Murasoli Selvam

முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முரசொலி பத்திரிக்கையின் ஆசிரியருமான இருந்த முரசொலி செல்வம் (82) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முரசொலி செல்வம் உயிரிழந்தார்.

Advertisment

கலைஞரின் மகள் செல்வியின் கணவரான செல்வம் முரசொலி மாறனின் சகோதரரும் ஆவார். திமுகவின் முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருந்த அவர், 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி முரசொலி நாளிதழை மேம்படுத்தியவர். முரசொலி செல்வத்துடைய மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் முரசொலி செல்வத்தின் உடல் பெங்களூருவில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டு கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. முரசொலி செல்வத்தின் உடலை கட்டியணைத்து முதல்வர் ஸ்டாலின் கதறி அழுதார். முரசொலி செல்வத்தின் உடல் வருவதற்கு முன்பே, அவரது வீட்டிற்கு வந்த ஸ்டாலின், தனது இறுதி அஞ்சலியை அவருக்குச் செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு அமைச்சர்கள் உறவினர்கள், நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.