Advertisment

எழுத்தாளர் செல்லப்பனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Chief Minister MK Stalin congratulates writer Sellappan!

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே. செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ நாவலை மொழிபெயர்ப்பு செய்ததற்காககே. செல்லப்பனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இலக்கியத் துறையின் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் கே. செல்லப்பனுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துதெரிவித்துள்ளனர்.

Advertisment

அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கே. செல்லப்பனுக்கு வாழ்த்துதெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உலக இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை உலகெங்கும் எடுத்துச் செல்லும் அறிவுப் பண்டமாற்று என்பது பெரும்பணி - அரும்பணி! அத்தகைய அரும்பணியில், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது, வங்கத்துக் கவிஞர் தாகூரின் புதினத்தைத் தமிழில் வடித்துள்ள முனைவர் கா.செல்லப்பன், உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்துள்ள இராகவன், சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ புதினத்தை மராத்தியில் மொழிபெயர்த்துள்ள சோனாலி நவாங்குள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்!" எனத் தெரிவித்துள்ளார்.

chief minister sahitya akademi award WISHES
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe