கி. வீரமணிக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்! (படங்கள்)

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (02/12/2021) திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 89வது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் மற்றும் கி. வீரமணியின் துணைவியார் வீ. மோனாம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

chief minister K.Veeramani Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe