Advertisment

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை - முதல்வர் அறிவிப்பு 

Chief Minister mk stalin announed Incentives for Transport Workers

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பொங்கலையொட்டி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர்ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட 8 போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றக் கூடிய ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகையை அறிவித்துள்ளார். இதில் ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களின்பணிகள்முக்கியமாக இருக்கிறது. இதனால் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்டுள்ளது.

Advertisment

போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1,17,129 பேருக்கு மொத்தம் ரூ.7.01 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 200 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணியாற்றியவர்களுக்குரூ.625 என்றும்200 நாட்களுக்குக் குறைவாகப் பணியாற்றியவர்களுக்கு ரூ.195 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Transport
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe