/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2148.jpg)
தஞ்சை மாவட்டம், களிமேடு பகுதியில் அப்பர் தேர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி11 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.
மேலும், விபத்து நடந்த பகுதிக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்த்துவிட்டு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திமுக சார்பில் தஞ்சை விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)