ADVERTISEMENT

வாதாடிய டி.ஆர்.பி. ராஜா..! ஒப்புதல் அளித்த முதலமைச்சர்! 

02:35 PM Dec 30, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

கோப்புப் படம்

ADVERTISEMENT

திமுக ஆட்சி அமைத்தும் நடைபெற்ற நிதி நிலை அறிக்கை விவாதத்தில் மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, “நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து பேசினார். அப்போது அவர், நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியம் மிகக் குறைவாக இருக்கிறது. அவர்களுக்கான ஊதியம் உயர்த்த வேண்டும். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ. 90 முதல் ரூ. 100 கோடி வரை செலவாகும். ஆனால், 35,000 குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறும். அதனால், இதனை முதல்வர் பரிசீலினை செய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக தஞ்சாவூருக்கு நேற்று சென்றார். அங்கு இன்று நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதேபோல், மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா சட்டமன்றத்தில் ஊதிய உயர்வு குறித்து பேசினார். மேலும், துறை அமைச்சரிடம் போராடினார். என்னிடமும் வாதாடினார்.

துறை அமைச்சர் சக்கரபாணியும் என்னிடம் ஊதிய உயர்வு குறித்து பேசினார். அதனை பரிசீலித்து, பட்டியல் எழுத்தருக்கு மாத ஊதியம் ரூ. 5,285 ஆகவும், உதவியாளர்கள், காவலாளிகளுக்கு தலா ரூ. 5,218 ஆகவும், அகவிலைப்படி ரூ. 3,499 சேர்த்தும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டைக்கு ரூ. 3.25 என வழங்கப்பட்டு வந்த கூலி ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக ரூ. 83 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள் எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT