செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்

 Chief Minister met Senthil Balaji and inquired about his health

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை முதலே அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, கே.என். நேரு. உதயநிதி, ரகுபதி என பல்வேறு துறை அமைச்சர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்தித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து கருத்துக்களைத் தெரிவித்துவிட்டுச் சென்ற நிலையில்தற்பொழுது தமிழக முதல்வர், அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். அதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட இருப்பதால்இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு யாரும் அவரைச் சந்திக்க முடியாது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe