தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (03/02/2022) தலைமைச் செயலகம் வரும் வழியில் டி.டி.கே சாலையில், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் என்.சதிஷ், “CM SIR HELP ME” என்ற பதாகையுடன் நின்றிருந்ததை பார்த்து, உடனடியாக தனதுகாரை நிறுத்தச் சொல்லி, காரில் இருந்து இறங்கிஅவரை சந்தித்துப் பேசினார்.
அப்போது அந்த மாணவன், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து, இந்தியா முழுவதும் நீட் தேர்வு விலக்கு கொண்டு வர வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு முதலமைச்சர், நீட்டுக்கு எதிராக வலுவான போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது; நல்ல முடிவுக் கிட்டும் என்று உறுதியளித்தார்.முதலமைச்சர் கொடுத்த உறுதியால் மகிழ்ச்சியடைந்த ஆந்திர மாணவர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.