Skip to main content

காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு

Published on 25/06/2023 | Edited on 25/06/2023

 

chief minister meal announcement for police officers

 

சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வழங்கப்படும் மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி  சட்டப் பேரவையில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் போது சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காகக் கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், காவலர்களை ஊக்குவிப்பதற்கென மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறை தலைமை இயக்குநரின் பரிந்துரையின் பெயரில் காவல் அதிகாரிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படுகிறது.

 

அதன்படி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரி நாராயணனுக்கும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷுக்கும், சேலம் உட்கோட்ட இருப்புப் பாதை காவல் துணை கண்காணிப்பாளர் மா. குணசேகரனுக்கும், நாமக்கல் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் சு. முருகனுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றும் இரா. குமாருக்கும் மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

மேலும் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் மதுரை தென் மண்டலம் காவல்துறைத் தலைவர் அஸ்ரா கர்க் பணியை அங்கீகரித்து ரொக்கப் பரிசு இல்லாமல் சிறப்பு பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த விருது மற்றும் பதக்கங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் காவலர்களுக்கு வழங்க உள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்