Advertisment

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் பயணம்

Chief Minister M. K. Stalin's visit to Vellore today

செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள். அதே செப்டம்பர் 17 ஆம் தேதி 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. இதனை ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவாக திமுக சார்பில் கொண்டாடுவது வழக்கம். அதே சமயம் கலைஞரின் நூற்றாண்டு விழாவும் தொடங்கி நடைபெறுவதால் இந்தாண்டு முப்பெரும் விழா முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Advertisment

அந்த வகையில் திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பைபாஸ் சாலை அருகில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. மேலும் அந்த அறிவிப்பில் “ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது மயிலாடுதுறை கி. சத்தியசீலனுக்கும், அண்ணா விருது மீஞ்சூர் க. சுந்தரத்திற்கும், கலைஞர் விருது அமைச்சர் ஐ. பெரியசாமிக்கும் பாவேந்தர் விருது தென்காசி மலிகா கதிரவனுக்கும் பேராசிரியர் விருது பெங்களூர் ந. இராமசாமிக்கும் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் வேலூரில் நடைபெற உள்ள திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையிலிருந்து காட்பாடிக்கு செல்கிறார். நாளை முப்பெரும் விழாவை முடித்து விட்டு இரவு 8.35 மணிக்கு காட்பாடியில் இருந்து சென்னை திரும்புகிறார்.

Train katpadi Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe